Editorial / 2020 மே 24 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெதிரிகிரிய தியசேனபுர ரத்மல்யாய பிரதேசத்தில், அதிசக்திவாய்ந்த மின்சாரம் தாக்கியதில், நபரொருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த பண்டார ஜயசுந்தர (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே, இன்று (24) மரணமடைந்துள்ளார்.
மேற்படி நபர் தனது வீட்டில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கானார் என்று தெரிய வருகிறது.
மேற்படி நபரை பொல்லன்னறுவை வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்ற போதிலும் அந்நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகிறது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026