Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம்.எம்.ஏ.காதர்
இம்மாதம் ஜனவரியில் கல்வியமைச்சின் கீழுள்ள பாடசாலைகளுக்கு அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது. இப்போட்டிப் பரீட்சைக்கான தயார்படுத்தல் கருத்தரங்கு, புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் எதிர்வரும் சனிக்கிழமையும் (12) ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் பொதுஅறிவு, நுண்ணறிவு ஆகிய பாடங்கள் சிறப்பாக கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கருத்தரங்கு வடமேல், வடமத்திய, மேல், மத்திய, வட மாகாண பரீட்சாத்திகளின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, மேற்படி போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுவதோடு, வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தயாராகின்ற பட்டதாரிகளும் கலந்து பயன்பெறலாம்.
தொடர்புகளுக்கும் பதிவுகளுக்கும் பின்வரும் இலக்கங்களோடு தொடர்புகொள்ள முடியும். 0712833970, 0776327943.
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago