2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அநுராதபுரம் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்விக்கான வசதி வாய்புகளை ஏற்படுத்தி கொடுக்காமை, மஹாபொல புலமைப்பரிசிலை வழங்காமை, பட்டத்துக்கு பதிலாக டிப்ளோமா வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள், கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் வகுப்பு புறக்கணிப்பிலும்  ஈடுபட்டு வருகின்றனர்.

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு கோரி, 40 க்கு மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், சிலர்  இன்று (10) பல்கலைக்கழகத்தின் கூரை மீதேறி, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X