2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அநுராதபுரம் மாவட்டத்தில் திடீர் மரணங்கள் அதிகரிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

டப்ளியூ. எம். பைசல்

அநுராதபுரம் மாவட்டத்தில் திடீர் மரணங்கள் கடந்த ஒகஸ்ட் மாதமளவில் எதிர்பார்க்காத விதமாக அதிகரித்துள்ளதாக, வட மத்திய மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் பாலித பண்டார தெரிவித்தார்.

வைத்தியசாலை பதிவுகளின்படி திடீர் விபத்துகளில் 25 பேர் மரணமடைந்துள்ளனர்.மேலும், திடீர் வீதி விபத்துகளில் 20 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திடீர் விபத்துகளால் இடம்பெற்ற மரணங்கள் ஏனைய மாதங்களை விடவும் ஒகஸ்ட் மாதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

திடீர் மரணங்களால் ஆகஸ்ட் மாதம் 20 பேர் மரணமடைந்துள்ளனர்.

வீதி விபத்துகளை விட  நீரில் முழ்கி இரண்டு பேரும், கிணற்றில் வீழ்ந்து ஒருவரும், மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவரும், தீப்பற்றி ஒருவருமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர்.

இம்மாரணங்கள் அநுராதபுரம், பொலன்னறுவை, பரசன்கஸ்வெவ, மிகிந்தல, கலென்பிந்துனுவெவ, கல்நேவ மகவிலச்சிய, திறப்பன, கெப்பிதிகொல்லாவ, ராஜாங்கன, தந்திரிமலை, எப்பாவல ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X