Princiya Dixci / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
17 ஆடுகளை சிறிய ரக வான் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தேகம நகருக்கு அண்மையில் வைத்தே இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வானின் பின்புற ஆசனங்களை அகற்றிவிட்டு அதனுள்ளேயே 17 ஆடுகள் ஏற்றப்பட்டிருந்தாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கஹடகஸ்திகிலிய மற்றும் கட்டுபொத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவ்வருவரும் குறித்த ஆடுகளை மிஹிந்தலையிலிருந்து நவகத்தேகம ஊடாக கொழும்புக்குக் கொண்டு சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடுகளுடன் கைப்பற்றப்பட்ட வான் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நவகத்தேகம பொலிஸார் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
நவகத்தேகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுசில் பியசிரியின் ஆலோசனையின் பேரில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
35 minute ago
54 minute ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
54 minute ago
01 Feb 2026