Princiya Dixci / 2015 நவம்பர் 08 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-முஹம்மது முஸப்பிர், ஹிரான் பிரியங்கர ஜெயசிங்கர, ஜூட் சமந்த
புத்தளம், ஆனமடு கொட்டுக்கச்சி எத்துன்கொட கிராமத்தில் வசிக்கும் எம்.தனபால என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்பட்ட நெற் கதிர்கள், பெரிய மரம் போன்று வளர்ந்து அபூர்வமாகக் காட்சியளிக்கின்றன.
பரம்பரை விவசாயியான தனபாலவுக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் சில விதை நெற்கள் கிடைத்துள்ளன. அவைகளை அவர் தனது வீட்டுத்தோட்டத்தில் பதியம் போட்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பதியம் போடப்பட்ட நெற்கதிர்கள், ஆறு மாதங்களில் சுமார் 12 அடிக்கும் அதிகமாக பெரிய மரமாக வளந்துள்ளன. இதன் ஒரு நெற் கதிரின் எடை சுமார் 300 கிராம் அளவில் உள்ளதாக அதன் உரிமையாளர் தனபால தெரிவித்தார்.
தான் ஒரு போதும் இவ்வாறான நெல் மரங்களைக் கண்டதில்லை என்று கூறும் அவர், இந்த நெல் மரங்களைப் பாதுகாப்பதற்கு தன்னால் இயன்ற முறைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த நெல் மரங்களில் மிகவும் செழிப்பாக நெல் கதிரிட்டுள்ளதால் பறவைகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வீட்டிலுள்ள நுளம்பு வலைகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
.jpg)

.jpg)
21 minute ago
28 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
2 hours ago
05 Nov 2025