2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அரபுக் கல்லூரிக்கு கணினிகள் கையளிப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் இயங்கும் மன்பஉஸ்சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரிக்கு ஒரு தொகுதி கணினிகளை கையளிக்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ரியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

அல்குர்ஆனை மனனம் செய்யும் பிரிவில் 160க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த அரபுக் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். இதன் நிர்வாக பணிகளை இலகுவாக்கும் நோக்கில் கல்லூரி நிர்வாகத்தினால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த கணினி தொகுதிகளை எஸ்.எச்.எம். நியாஸ் பெற்றுக்கொடுத்துள்ளார்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், கல்லூரி நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம். நபீல், நகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.மு{ஹசி உட்பட பலரும் இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X