Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 22 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிக்கள அதிகாரிகளுக்கு, விரிவான மக்கள் சேவையை ஆற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி, அவர்களது வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கிராமிய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவர்களின் கடமையாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவை நிஷங்கமல்லபுர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ பணியகங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று (22) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வினைத்திறன்மிக்க அரச சேவையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பொலன்னறுவை மாவட்டத்தின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 180 உத்தியோகபூர்வ பணியகங்கள் மற்றும் 02 புகையிரத உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
தமன்கடுவை, திம்புலாகல, வெலிகந்த, லங்காபுர, மெதிரிகிரிய, ஹிங்குரக்கொட, எலஹெர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த உத்தியோகபூர்வ பணியகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கிராம சேவகர் பிரிவுகளில் சேவைபுரியும் கிராம சேவகர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் ஆகிய அரசாங்க அதிகாரிகளின் சேவைகளை ஒரே இடத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வசதிகள் உத்தியோகபூர்வ பணியகங்களின்மூலம் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
180 உத்தியோகபூர்வ பணியகங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக பொலன்னறுவை ரவும் வீதி அருகில் அமைந்துள்ள பெந்திவெவ மற்றும் நிஷங்கமல்லபுர ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ பணியகங்களை, ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago