Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 18 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடப்பு கிராமத்திலுள்ள தேங்கியுள்ள வெள்ள நீர், 'அறுவாய்' வெட்டப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை கடலுக்குள் விடப்பட்டது.
முந்தல் பிரதேச செயலாளர் மற்றும் புத்தளம் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியின் கீழ், பெக்கோ இயந்திரம் கொண்டு அறுவாய் தோண்டப்பட்டு கடலுக்குள், வெள்ளநீர் விடப்பட்டது.
எனினும், இந்த அறுவாய் வெட்டப்போவதாக முன்னறிவித்தல்கள் எதுவும் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமது போக்குவரத்து மற்றும் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் இவற்றைத் தவிர்க்க கூடிய விரைவில் இப்பகுதிக்கு பாலம் அமைத்துத்தருமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
50 minute ago
3 hours ago