Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின், எம்.யூ.எம். சனூன்
புத்தளம், கற்பிட்டி அல் - அக்ஷா தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் முஹம்மட புஹாரி மெஹ்ரப் ரோஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், தேசிய கொள்கை பொருளாதார தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், ஐ.தே.க. புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி உட்பட முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், ஐ.தே.க., ஸ்ரீ.சு.க., ஸ்ரீ.மு.கா., அமைப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள 2 மாடிகளைக் கொண்ட ஆசிரியர் விடுதியின் நிர்மாணப் பணிகளுக்காக, கல்வி அமைச்சு, 10 மில்லியன் ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
80 ஆசிரியர்கள் கல்வி கற்றுக்கொடுக்கும் கற்பிட்டி அல்- அக்ஷா தேசியப் பாடசாலையில் சுமார் 60 ஆசிரியர்கள் வெளிப்பிரதேசத்தில் இருந்து வருகை தருவதாக அதிபர் முஹம்மட புஹாரி மெஹ்ரப் ரோஸ் ௯றினார்.
இவ்வாறு வருகை தரும் பல ஆசிரியர்கள் கற்பிட்டி நகரில் வாடகைக்கு பெறப்பட்ட வீடுகளிலேயே தங்கியிருந்து பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர்.
மிக நீண்ட காலமாக குறித்த பாடசாலையில் ஆசிரியர் விடுதி நிர்மாணிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி கல்வி அமைச்சுக்கு வலியுறுத்தப்பட்டு வந்த நிலையிலேயே, இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
2 hours ago
2 hours ago