2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆனமடுவ வைத்தியசாலை தரமுயர்வு

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர், ரஸீன் ரஸ்மின்

புத்தளம், ஆனமடுவில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆனமடு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான பாலித ரங்கே பண்டாரவின் வேண்டுகோளுக்கு அமையவே, இந்த இந்த வைத்தியசாலையைத் தரமுயர்த்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஆனமடு தொகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் தினமும் பெருமளவிலான மக்கள் வைத்திய சேவையினைப் பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

இந்த தள வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக் கூடம், அம்பியூலன்ஸ் சேவைகள், வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, நவீன ஆய்வு கூடம் உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இதன் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X