Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்த்துக்காக உஸ்வெட்ட கொய்யா முதல் கொச்சிக்கடை வரையிலான கடற்பகுதியில் மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரி, நேற்றுத் திங்கட்கிழமை (17) காலை முதல் மீனவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியதுடன், கொழும்பு – சிலாபம் பிரதான வீதியை மறித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 1,500இற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்குபற்றினர்.
கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்துக்காக கடல் பகுதியில் மணல் அகழ்ந்தெடுக்கபடுவதன் காரணமாக, கரையோரங்களில் உள்ள மணல் கடலுக்கு இழுத்துச் செல்லப்படும் எனவும் இதன் காரணமாக மீன்கள் அழிவடைவதுடன், மீன் குஞ்சுகள் பாதிக்கபுடும் எனவும் வெகு விரைவில் மீன் உற்பத்தி குறைந்துவிடும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதுதொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில்,
இந்த பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதுவரை பதில் கிடைக்கவில்லை. அரசாங்கமோ அல்லது உரிய தரப்பினரோ எமக்கு உரிய பதில் தராவிடில் சாகும் வரை போராட்டம் நடத்துவோம் என்றார்.
இதேவேளை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வீதிகளை மறித்து போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவையும் மீறி கொழும்பு – சிலாபம் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
2 hours ago
4 hours ago