Princiya Dixci / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்து வந்த சந்தேகநபரின் இடுப்பிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கஞ்சாசுருள் மீட்கப்பட்ட சம்பவம், இன்று புதன்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபரை, நீதிமன்ற வாயிலில் வைத்து சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு கஞ்சாசுருள் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த டப்ளியூ.ஏ.எம்.சுரேந்ர பெரேரா என்ற குறித்த சந்தேகநபர், 15 கிராம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்த போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த 9ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நபரை, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்து வந்த போது மேற்குறிப்பிட்டவாறு கஞ்சாசுருள் மீட்கப்பட்டமையினால் மீண்டும் இவரைக் கைது செய்து பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
23 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
1 hours ago