2025 மே 02, வெள்ளிக்கிழமை

இரண்டு கஜமுத்துகளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

06. ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர், ஜூட் சமந்த

விலை மதிக்க முடியாத இரண்டு கஜமுத்துகளுடன், நேற்று (01) புத்தளத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மணல் குன்று பிரதேசத்தில், ஹெராயின் விற்பனை செய்யப்படுவதாக புத்தளம் தலைமையக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, இரண்டு கஜமுத்துகளும், 620 மில்லி கிராம் ஹெராய்னும் கைப்பற்றப்பட்டுள்ளது.

புத்தளம் வன்னாத்தவில்லு பகுதியிலிருந்து, கஜமுத்துகளை விற்பனைச் செய்யும் நோக்கில் கொண்டுவந்ததாக, சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X