ரஸீன் ரஸ்மின் / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி, கண்டல்குழி, குடாவ கடற் பிரதேசத்தில் சுமார் 60 அடி நீளமுள்ள திமிங்கலமொன்று, இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை குறித்த கடற்பிரதேசத்தில் பாரிய திமிங்கலமொன்று மிதந்து வந்துள்ளதை மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
அத்துடன், நேற்றிரவு 7 மணிக்கு குறித்த மீன், கண்டல்குழி குடாவ கடற்பிரதேசத்தில் கரையொதுங்கியதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை வெளியே எடுப்பதற்கு கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லக்ஷ்மன் ரன்வல ஆராச்சி தலைமையிலான பொலிஸார், கடற்படையினரும், வனஜீவிகள திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருடன் மீனவர்களும் ௯ட்டாக இணைந்து முயற்சித்தனர்.
இன்று (18) காலை 9 மணி முதல் கரையொதுங்கிய திமிங்கலத்தை வெளியே எடுப்பதற்கு இரண்டு பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் முயற்சித்த போதிலும், மாலை 3 மணிவரை குறித்த திமிங்கலம் வெளியே எடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அதிகமான சுற்றுலா பயணிகள் இந்தப் பகுதியைச் சூழ இருப்பதனாலும், மக்களின் நலன்களை கவனத்திற் கொண்டும் குறித்த திமிங்கலத்தை உடனடியாக வெளியே எடுத்து புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தைப் பார்வையிடுவதற்காக கற்பிட்டி, முந்தல், புத்தளம் ஆகிய பகுதிகளில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் வருகை தந்திருந்தனர்.



1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago