Princiya Dixci / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நியமித்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் தேசிய குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் மேன் முறையீடுகளை பரிசீலிக்கும் ஐவர் அடங்கிய குழு தனது கடமைகளை ஆரம்பித்துள்ளது.
இக்குழுவுக்கு நவம்பர் 21ஆம் திகதி வரை முறையீடுகளை அனுப்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புத்தளம் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதம் குறித்து தத்தமது பிரதேசங்களில் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக மேற்படி குழுவுக்கு எழுத்து மூலமும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்க முடியும்.
குறிப்பாக கற்பிட்டி பிரதேச சபை, ஆராட்சிக்கட்டுவ பிரதேச சபை உட்பட ஏனைய பிரதேச சபைகள் பகுதிகளில் உள்ள சமூக, சமய, அரசியல் அமைப்புக்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மேன் முறையீடுகளை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு, 330, யூனியன் ப்ளேஸ், கொழும்பு - 02 எனும் முகவரிக்கோ அல்லது appeal.dc@pclg.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் தொடர்பில் தகவல்கள் மற்றும் வரைபடங்கள் முதலியவற்றை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், நகர, பிரதேச சபைகள் ஆகிய இடங்களில் பார்வையிட முடிவதுடன், www.pclg.gov.lk என்ற இணைய முகவரியினூடாகவும் பார்வையிடலாம்.
மேலதிக விவரங்கள் தேவைப்படின்: அமைச்சின் உதவிச் செயலாளர் பியங்கா நிலவக்க ஆராச்சி 011 - 2454122, அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்துனி ரத்னாயக்க - 011 - 2452430 ஆகியோருடன் தொடர்புகொள்ளவும்.
14 minute ago
21 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
2 hours ago
05 Nov 2025