Princiya Dixci / 2016 ஏப்ரல் 19 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
புத்தளம், கொட்டுகச்சிப் பகுதியை அண்டியுள்ள கிராம மக்கள் உபயோகிக்கும் கிணறு ஒன்றில் இனந்தெரியாத சிலர், கழிவு எண்ணெய் கலந்ததுடன், நாய் ஒன்றையும் வீசியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கிணற்றிருந்து கடந்த சனிக்கிழமை (16) இரவு நாய் குரைக்கும் சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் இணைந்து கிணற்றிலிருந்து நாயைக் காப்பாற்றியதாகவும் இதன்போது கிணற்று நீரில் கழிவு எண்ணெய் கலந்திருந்ததை அவதானித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
அன்றைய தினத்திலிருந்து நீர்த் தேவைகளின் போது பல அசௌகரியங்களுக்கு தாம் முகங்கொடுப்பதாகவும் பின்னர் கடந்த திங்கட்கிழமை (18) கிணற்றைத் தாம் சுத்தம் செய்ததாகவும் பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக புத்தளம் பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளதாகவும் எனினும், இதுவரையில் எவரையும் கைதுசெய்யவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த கிணறு நீரை, ஏழு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago