2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கஞ்சா குற்றச்சாட்டு 1,287 பேருக்கு வழக்கு

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

பொலன்னறுவை மாவட்டத்தில், கஞ்சா போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், கடந்த வருடம் 1,287 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரெனவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாவும், பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தம்மிக்க வீரசேகர தெரிவித்தார்.

இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர், 20-40 வயதுக்குட்பட்டவர்களென அவர் குறிப்பிட்டார்.

அரலகங்வில, மெதிரிகிரிய, வெலிகந்த ஆகிய பொலிஸ் பிரிவுகளைச் சேர்தவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம், ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில், 17,18 வயதுகளையுடையவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ​அதிகாரி சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X