2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கடற்படையினரின் வாகனம் மோதி முதியவர் படுகாயம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

சிலாபம் கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் மீது, கடற்படையினருக்குச் சொந்தமான கெப் ரக வாகனம் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காக்கப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த ஜி. ஜி. முதியான்சே (வயது 64) என்பவரே இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவராவார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் சாரதியான கடற்படை வீரர் ஒருவரும் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சிலாபம் பொலிஸார் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X