2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கடற்படையினரால்​ கைதான நால்வர் விசாரணையின் பின்னர் விடுதலை

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி-குதிரமலை கடற்பகுதியில்,அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நேற்று (11) நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பகுதியில், விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறித்த படகை சோதனைச் செய்த போதே, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, ஒரு டிங்கி படகும், இயந்திரமும், 25 கிலோ கிராம் மீன்களும், மீன்பிடி வலைகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும், கைது செய்யப்பட்ட நேற்றைய தினம் அவர்கள் அந்த அனுமதிப்பத்திரத்தை கைவசம் வைத்திருக்கவில்லை என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைதான நால்வரும், விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனரென, புத்தளம் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் சரத் சந்திர நாயக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X