Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூன் 20 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், சாலியாவெவ பிரதேசத்தில் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என, சாலியாவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குமார சிங்க தெரிவித்தார்.
சாலியாவெவ பகல புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த கத்வானி முதியன்சலாகே லலித் குமார என்பவரே, இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், நேற்றிரவு 10.30 க்கு, சாலியாவெவ பகல புளியங்குளம் பிரதேசத்திலுள்ள குளம் ஒன்றுக்கு அருகில் பன்றியைப் பிடிப்பதற்காக கட்டுத்துவக்குப் பொருத்தியுள்ளார்.
இதன்போது குறித்த கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளாரென, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம், நீதவான் விசாரணையின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக, புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில், சாலியாவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago