Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட, புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென, புத்தளம் வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார்.
கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட குறித்த யுவதி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் குறித்து, விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் பற்றிய தகவல்களை, சுகாதார சேவை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு, அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, புத்தளம் வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்த அவர், வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர் எனவும் புத்தளம் வைத்தியசாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
44 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
2 hours ago