ஹிரான் பிரியங்கர / 2017 ஜூன் 26 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்ட காரியாலயத்தில் கடமையாற்றிய உதவி அதிகாரியை, கடந்த ஒரு மாதமாகக் காணவில்லை என்று, அவருடைய உறவினர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கம்பஹா, நிட்டம்புவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுமேதா புத்ததாஸ என்பவரையே இவ்வாறு காணவில்லை என, அவருடைய மனைவி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, காணாமல் போனவரின் சகோதரரும் தன்னுடைய, சகோதரரைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளார் என்று பொஸிஸார் தெரிவித்தனர்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர், மீண்டும் வேலைக்குத் திரும்பிய நிலையிலேயே, இவ்வாறு காணாமல் போயுள்ளாரென, அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
29 minute ago
36 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
41 minute ago
2 hours ago