2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கரைத்தீவில் கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது

Thipaan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு கடற்கரை பிரதேசத்தில் நேற்றுசனிக்கிழமை கரையொதுங்கிய சடலம் கல்பிட்டி கடலில் காணாமல் போயிருந்த மீனவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். 

நீர்கொழும்பு சிரிவர்தனபுர முன்னக்கர எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மொஹான் பிரதீப் பெரேரா (வயது 41) எனும் மீனவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியதை அவதானித்த பிரதேசவாசிகள் வண்ணாத்திவில்லு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த மீனவர் நீர்கொழும்பிலிருந்து மற்றும் இரு மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளார். 

இவ்வாறு வந்துள்ள இவர்கள் சில தினங்களின் பின்னர் கடந்த 15ஆம் திகதி மீண்டும் கல்பிட்டி கடலுக்குச் செல்வதற்காக தயாராகி அதற்கு முன்னர் மதுபானம் அருந்திவிட்டு கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே இந்நபர் கடலுக்குள் சென்ற போது காணாமல் போயுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி கடலுக்குச் சென்று தனது கணவர் காணாமல் போனமை தொடர்பில் அவரது மனைவி கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்துள்ளார்.

இந்த முறைப்பாட்டையடுத்து கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இவரது சடலம் இவ்வாறு கரைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கல்பிட்டி மற்றும் வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X