2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கல்பிட்டி பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாடு கிராமத்தில் அமைந்துள்ள கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 12.20 மணியளவிலேயே இக்கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்பிட்டி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னாள் உறுப்பினர் விராஜ் பிரேஸ்டியன் என்பவரின் வீட்டின் மீதே இவ்வாறு கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இக்கைக்குண்டு வீட்டின் முன்பகுதியில் வெடித்துள்ளதோடு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சமயம் முன்னாள் உறுப்பினரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இருந்திருந்துள்ளனர். எனினும் , வீட்டில் இருந்தவர்கள் எவருக்கும் காயங்களோ பாதிப்புக்களோ ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது.

இக்கைக்குண்டுத் தாக்குதல் யாரால் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X