Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
வரலாற்று ரீதியில் மிகவும் பழைமை வாய்ந்த பிரதேசமான புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் நைட்டாவின் பிரபல தொழிற்பயிற்சி நிலையமொன்றை அமைக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.
கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் 29ஆவது வருட நிறைவும் வருடாந்த கலை விழாவும் செவ்வாய்க்கிழமை (01) மாலை கல்பிட்டி சியாப் மண்டபத்தில் நடைபெற்றபோது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாலர் பாடசாலையின் அபிவிருத்தி சங்க தலைவர் எம். நியாஸ்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், திறன் அபிவிருத்தி தொழிற்பயிற்சி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டாரவிடம் நாம் இது தொடர்பாக விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த பிரதேசத்தில் வதியும் இளைஞர்களின் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்படவுள்ளன.
கல்பிட்டி பிரதேசத்தில் நீண்ட கால குறைபாடாக இருந்து வந்த நீதிமன்ற கட்டட தொகுதியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகீமின் மூலமாக கடந்த காலத்தில் இங்கு திறந்து வைத்துள்ளோம். அதேபோல குடிநீர் பிரச்சினையும் கூடிய விரைவில் தீர்த்து வைக்கப்படவுள்ளது.
இப்பிரதேசத்தின் விளையாட்டுகளில் கரப்பந்தாட்டம், முக்கிய விளையாட்டாக கருதப்படுகிறது. எனவே, கரப்பந்தாட்ட வீரர்களுக்கான சகல உபகரணங்களையும் பெற்றுக்கொடுக்க உள்ளதோடு அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி அவர்களை தேசிய மட்டத்துக்கு உயர்த்தவுள்ளோம் எனக்கூறினார்.
கலை நிகழ்வில் கலந்துகொண்ட மழழைகளுக்கு மாகாண சபை உறுப்பினர் பரிசில்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்பிட்டி அமைப்பாளர் எம்.எச்.எம்.ஹில்மி, கல்பிட்டி பிரதேச ஐ.தே.கட்சி முக்கியஸ்தரும் கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அலாவுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முசல்பிட்டி அமைப்பாளர் ஹசன் மொஹிதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago