Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
ஆராச்சிக்கட்டு அடிப்பள வீதியில் கார் ஒன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில், 16, 17 வயதுகளையுடைய நான்கு பாடசாலை மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகி சிலாபம் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ள இவ்விபத்தில், ஆராச்சிக்கட்டு பண்டாரஹேன எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களே, இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இவ்விபத்தால் கார் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதோடு, அக்கார் மோதிய மின்கம்பமும் முறிந்து வீழ்ந்து அப்பிரதேசத்துக்கான மின் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தைச் செலுத்திய மற்றும் காரில் பயணித்த எந்த ஒருவரிடத்திலும் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்று, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025