Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுமக்களின் வாழ்க்கை பிரச்சினைகளை நன்குணர்ந்த ஜனாதிபதி என்ற வகையில் தான் எப்போதும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குருணாகல் மாவட்டத்தில் உள்ள விவசாய சமூகத்தினருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்ட அரச காணிகளில் குடியேறியுள்ள, காணிகளை அபிவிருத்தி செய்துள்ள விவசாய சமூகத்திற்கு 2,000 காணி உறுதிகள் நேற்று (21) பிற்பகல் வழங்கிவைக்கப்பட்டன.
நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளுக்கும் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதென்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
குருணாகல் மாவட்டத்தில் கல்கமுவை, ஆனமடுவை, கிரிபாவ, அம்பன்பொல, மஹவ, கல்கிரியாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள விவசாய சமூகத்திற்கு இந்த காணி உறுதிகள் வழங்கப்பட்டதுடன், மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 40 பேர்களுக்கான உறுதிப் பத்திரங்களை, ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
பண்டுவஸ்நுவர மேற்கு சாசனாரக்ஷண சபையின் இரண்டாம் வலயத்தின் தலைவரும், பண்டுவஸ்நுவர பண்டுகாபய பிரிவெனாவின் தலைமை பிக்குவும் ஹொரகொல்ல மேதங்கர பௌத்த மத்திய நிலையம் மற்றும் திகல்கெதர ஷைல்யாராமய விகாரையின் விகாராதிபதியுமான சங்கைக்குரிய வஹன்துரே சித்தார்த்த தேரருக்கான உறுதியையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
அரச நிறுவனங்களுக்கு காணிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் வடமேல் மாகாண சுகாதார சேவை திணைக்களத்திற்குமான காணி உறுதிகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, எஸ்.பீ நாவின்ன, துமிந்த திசாநாயக்க, பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் கே.கே. லோகேஷ்வரன், முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, காணி, நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யு.எஸ். கருணாரத்ன, மாவட்ட செயலாளர் காமினி இலங்கரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago
3 hours ago