Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
குருநாகல் மாவட்டத்தில், பொலிஸார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் பாதுகாப்புடன் முஸ்லிம்களின் ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றது.
குருநாகல் நகர் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பயான்கள் 20 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தி சகல பள்ளிவாசல்ளிலும் தொழுகை நிறைவேற்றப்பட்டு அமைதியுடன் மக்கள் வீடு திரும்பினர்.
நாட்டின் தற்போதைய சூழலில் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா வழங்கிய வழிகாட்டலின் கீழ் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும், இமாம்களும் அதிக கவனம் செலுத்தி தொழுகையை நிறைவு செய்தனர்.
அதேவேளை ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் பல்லின மக்கள் வாழும் நாட்டில் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வு மலரவும் நாட்டில் சுபீட்சம் அபிவிருத்தியும் உருவாகவும் பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்ற தூஆப் பிரார்த்தனை விசேடமாக இடம்பெற்றது.
குருநாகல் மாவட்டத்தில், குருநாகல் நகர், தெலியாகொன்ன, பறகஹதெனிய மல்லவப்பிட்டிய உள்ளிட்ட எல்லாப் பிரதேசங்களிலும் ஜும்ஆத் தொழுகை மிக அமைதியாக இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .