2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 01 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் கடற்படைப் பிரிவின் கடற்படை அதிகாரிகள் மற்றும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, 8 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி பிரதேசத்திலேயே, இவ்வாறு கேரள கஞ்சாவுடன் இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நப,ர் கேரள கஞ்சாவை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்று கொண்டிருந்த போதே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 கிலோகிராம்களைக் கொண்டதாக 4 பொதிகளாகப் பொதி செய்யப்பப்ட்டிருந்ததாக நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்களுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டுள்ளதோடு, புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X