Princiya Dixci / 2015 நவம்பர் 04 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
கல்பிட்டி நகருக்கும் அதனை அண்டிய கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சவூதி அரேபியாவின் நிதியுதவிகளோடு இப்பகுதி மக்களுக்கு தூய நீரைப் பெற்றுகொடுக்கும் முஸ்தீபு மேற்கொள்ளபட்டு வருகின்றது என வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்பிட்டி நகரைப் பொறுத்த வரை இங்கு மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அத்தோடு, வட புல மக்களும் இணைந்து வாழ்கின்றனர்.
மக்கள் தொகைக்கு ஏற்ப இங்கு நீர் வளம் இல்லை. அதேநேரம், மக்கள் தொகை அதிகம் என்பதால் மலசலகூடங்களும் கிணறுகளும் அருகருகே அமைந்துள்ளன. இதனால் நீர் மாசடைந்துள்ளது.
இங்குள்ள ஏனைய பகுதிகளும் விவசாய பிரதேசம் என்பதால் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் இரசாயான பசளை பாவனை மூலமும் நில நீர் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக முதலைப்பாளி மற்றும் முசல்பிட்டி போன்ற பிரதேசங்களில் குடிநீர் பாவனைக்கு ஏற்புடையதாய் இல்லை.
இவ்வாறான விடயங்களால் இந்த நீரினை பாவிக்கும் மக்கள் சிறுநீரக பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை அனுபவிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இதனை கருத்திற்கொண்டு இவ்விவகாரத்தை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம் என்றார்.
18 minute ago
25 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
2 hours ago
05 Nov 2025