2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சேயாவின் கொலையைக் கண்டித்து ஊர்வலம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான் 

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுந்துநெரித்துக் கொலைசெய்யப்பட்ட 5 வயதான சேயா சந்தவமியின் படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்து உரிய தண்டணை வழங்குமாறும் வற்புறுத்தி நீர்கொழும்பு, பெரியமுல்லையில் ஜும்மா தொழுகையின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (18) ஊர்வலம் இடம்பெற்றது.

நீர்கொழும்பு, பெரியமுல்லை ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஆலோசனையுடன், நீர்கொழும்பு முஸ்லிம் இளைஞர் அமைப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த அமைதி ஊர்வலத்தில் பங்கு பற்றிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்து அமைதியான முறையில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த எதிரப்பு நடவடிக்கையில் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான பரீஸ், ஹீஸான் ஆகியோரும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X