2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சிறுவர் சந்தை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை, பொறுப்பாசிரியை திருமதி பௌசுல் ரூஸி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.

முன்பள்ளியில் கல்வி பயிலும் 35 மாணவர்களும் தமது பெற்றோர்களின் துணையுடன் வியாபார நடவடிக்கைகளில் பங்கு பற்றினர். இந்த முன்பள்ளியில் வருடா வருடம் நடைபெற்று வரும் இல்ல விளையாட்டு போட்டி, கலை விழா வரிசையில் இந்த சிறுவர் சந்தையும் இம்முறை அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி, ஐ.எப்.எம். முன்பள்ளியின் பழைய மாணவரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.எம். மு{ஹஸி, புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம். இக்பால், புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபை தலைவர் பீ.எம். ஜனாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X