2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவருக்கு தண்டம், நஷ்ட ஈடு செலுத்துமாறு உத்தரவு

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சிலாபம் இனிகொடவெல பிரதேசத்தில், சட்டவிரோதமான முறையில் தனது ஐஸ் தொழிற்சாலைக்கு மின்சாரம் பெற்ற  வர்த்தகருக்கு 50 ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்த சிலாபம் மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய சிவந்த மஞ்சநாயக்கா, 95 இலட்சத்து, 10 ஆயிரத்து 800 ரூபாயை மின்சார சபைக்கு நஷ்ட ஈடாக செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இலங்கை மின்சார சபையின் விஷேட மோசடி விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்த தகவல் ஒன்றிணையடுத்து,  சிலாபம் பிராந்திய மின் பொறியியலாளர், விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிலாபம் பொலிஸார் ஆகியோர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த தொழிற்சாலையின்  உரிமையாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் கடந்த ஒரு வருட காலமாக இவ்வாறு சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்று வந்துள்ளார் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X