Thipaan / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்து வென்னப்புவ ஆழ்கடல் பிரதேசத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு மீனவர்களை பிடித்த, வென்னப்புவ உல்ஹிட்டியான பிரதேச மீனவர்கள் சிலர், அவர்களை இன்று வெள்ளிக்கிழமை(18) அதிகாலை மஹவௌ கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைத்ததாக, மஹவௌ உதவி கடற்றொழில் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்தார்.
குறித்த மீனவர்கள் முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பயணித்த இரு படகுககள், தடை செய்யப்பட்ட வலைகள், நான்கு ஒக்சிஜன் சிலிண்டர்கள், நான்கு நீச்சல் உபகரணங்கள், இரு படகுகள் என்பன அடங்குவதாகவும் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
மீனவர்களைப் பிடிக்கும் போது அவர்களால் பிடிக்கப்பட்ட 50 கிலோகிராம் மீன்கள், ஆறு சிங்கி இரால்கள் என்பனவும் கைப்பற்றப்பட்ட படகுகளிலிருந்து கடற்றொழில் பரிசோதகர்களினால் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மாராவில வடக்கு மூதுகட்டுவ பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வருவதோடு, அப்பிரதேச கடல் பிரதேசத்துக்குச் மூழ்கிச் சென்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்நாட்டின் கடற்றொழில் சட்டத்தின் பிரகாரம் மனிதப் பாவனைக்காக நீரில் மூழ்கிச் சென்று மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்களும் இவ்வாறான சட்டதிட்டங்களைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக இவ்வாறு நீரில் மூழ்கி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மீனவர்கள் இதற்கு முன்னர் கடலில் கடல் அட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பித்துள்ளதாகவும், அதில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக அவர்களுக்கு அதற்கான அனுமதிப்பத்திரம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
அவ்வாறு அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தால் அதனைக் கொண்டு கடல் அட்டைகள் மற்றும் சங்கு பிடித்தல் மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும், மீன் பிடிப்பதற்கு அனுமதியில்லை எனவும் உதவி கடற்றொழில் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆறு பேருரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீனவ உபகரணங்கள், படகுகள் மற்றும் மீன், சிங்கி இரால்களுடன் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago