2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

சமாதான நீதவானாக பதவி பிரமாணம்

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

மதுரங்குளி மரிக்கார் சேனையை பிறப்பிடமாகவும் தற்சமயம் புத்தளத்தில் வசிப்பவருமான முஹம்மத் இப்ராஹீம் முஹம்மத் நவாஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்

புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் பீ. ராஜகருணா முன்னிலையில் வியாழக்கிழமை (26) இவர் அகில இலங்கை சமாதான நீதவானாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

முஹம்மத் நவாஸ் சுமார் முப்பத்தி ஐந்து வருடங்களாக இலங்கை வங்கியில் உயரதிகாரியாக கடமையாற்றியவர். மேலும், புத்தளம் சாஹிராவின் பழைய மாணவரான இவர், ஏற்கெனவே சுமார் ஐந்து வருடங்களாக புத்தளம் நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் சமாதான நீதவானாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X