2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுமி கொலை; ஒருவருக்கு மரண தண்டனை

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், இராஜாங்கனைப் பகுதியில் 15 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை ​செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 3 பிள்ளைகளின் 42 வயதுடைய தந்தையொருவருக்கு, சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி ரவிந்து அமல் ரணராஜ, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியே, இந்தச் சம்பவம் இடம்பெற்றள்ளது.

வழக்கு, தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டமையால் ஜுரிகள் சபைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டவரது சகோதரரும், சிறுமியின்​ கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவர் குற்றமற்றவர் எனத் தெரிவித்து, நீதிபதி விடுதலை செய்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X