2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள் இன்று (07) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பஸ் நடத்துநர் ஒருவர் மீது, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் சிலர் தாக்குதல் நடத்தியதை கண்டித்தே, இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நடத்துநர், ​மதரவில வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் உடனடியான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, சிலாபம் பயணிகள்  போக்குவரத்து சங்கம் ​​குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X