2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் மறியலில்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ட் சமந்த, துசித குமார  

புத்தளம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, பொலிஸார் இருவரைத் தாக்கி, அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரியை கூரிய ஆயுத்தால் குத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் நவம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்.  

சிலாபம் நீதவான் நீதிமன்றில் இவர், இன்று  (22) ஆஜ​ர்படுத்தப்பட்டபோதே, மாவட்ட நீதவான் மஞ்சுள திலக்கரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிலாபம்- மஹகம பிரதேசத்தைச் சேர்ந்த,  ஆர்.ஜீ. வசந்த விக்கிரம என்பவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ள்ளார். இவர், சிலாபம் பிரதேச சபையின் மொட்டுக் கட்சி உறுப்பினரெனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதுபோதையில் இருந்த குறித்த நபர், தனது மனைவியை தாக்குவதற்காக நேற்று  (21)  வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்துள்ளார். இதன்போது, அதனை தடுக்க முயற்சித்த பொலிஸாரை தாக்கிவிட்டு, பாதுகாப்பு அதிகாரியை  கையில் இருந்த கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளார். இதனையடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து  சந்தேகநபரை மடக்கிப் பிடித்து, சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X