Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 15 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், பொலன்னறுவை மாவட்ட மக்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்று, 'பொலன்னறுவை எழுச்சி' அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் அமுல் நடத்தப்பட்டு வருகின்றது.
நான்கு வருட காலத்தில் நிறைவு செய்யப்படவுள்ள (2016-2019) இத்துரித அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் வசிக்கும் 128,000 பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வாய்ப்பேற்படுவதுடன், சுமார் 80,000 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 5,500 நோயாளிகளும் அதனால் பயனடையவுள்ளனர்.
இத்திட்டங்களைப் பூர்த்தி செய்ய 6,500 மில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. பிரதான 12 கருத்திட்டங்களை உள்ளடக்கிய இப்பாரிய நீர் வழங்கல் திட்டமானது, 44 உப கருத்திட்டங்களை கொண்டதாகும். இதுவரை 12 உப கருத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் ஆலோசனையின் பேரில், அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதானவின் நேரடிக் கண்காணிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், இம்மாவட்டத்தில் வசிக்கும் சகலருக்கும் சுத்தமான குழாய் நீரை வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர சீனக்குடியரசின் 55,000 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் வெலிகந்த, எலஹெர, லங்காபுர முதலான பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கும் எல்லாமாக தமன்கடுவ, திம்புலாகல, ஹிங்குரக்கொட முதலான பிரதேசங்களில் வசிக்கும் 350,000 மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான திட்டமொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago