2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சுவர் இடிந்து வீழ்ந்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

முஹம்மது முஸப்பிர்   / 2017 செப்டெம்பர் 02 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டிடங்களை உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் நபரொருவர் கடையொன்றின் சுவற்றை இடித்துக் கொண்டிருந்த போது, அவரின் பின்னாலிருந்து சுவர், அவர் மீது திடீரென வீழ்ந்ததில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளாரென, புத்தளம் கல்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உளுக்காப்பள்ளம் ஹூசைனியாபுரத்தைச் சேர்ந்த  சுபைர் சுக்ரி (வயது 28) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

அப்பிரதேசத்தில் உள்ள பழைய கடை ஒன்றை இவர் உடைத்துக் கொண்டிருந்த போது, அவர் உடைத்த சுவற்றின் அதிர்வால் பின்புற சுவர் ஒன்று உடைந்து இவர் மீது வீழந்துள்ளதாகவும், இதன் பின்னர் உடனடியாக இவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்துள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

சுவர் வீழ்ந்து நெஞ்சுப் பகுதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள் பகுதியில் அதிக இரத்த வெளியானதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை, உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார். 

நுரைச்சோலை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X