2025 மே 15, வியாழக்கிழமை

ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் நூல்களின் கண்காட்சி

Kogilavani   / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் நூல்களின் கண்காட்சி மற்றும் உசாத்துணை பிரிவு திறப்பு விழா வைபவம் என்பன சனிக்கிழமை (10) காலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.எல்.சிராஜுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவுக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் இசட்.ஏ.சன்ஹீர், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எஸ்.ஏ.சி.யாக்கூப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் நூலக பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலும் நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்தும் முகமாகவும் இந்த நூல்களின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிபர் எஸ்.எல்.சிராஜுதீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .