Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
முந்தல் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட உடப்பு மற்றும் ஆண்டிமுனை ஆகிய பிரதேசங்களில், டெங்கு நுளம்பு பரவும் காணிகளைக் கண்டறியும் வேலைத்திட்டம், நேற்றுப் வியாழக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரைக் கொண்ட 10 குழுக்கள், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், இதன்போது, சுமார் 503 இடங்கள், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், 462 வீடுகள், 02 பாடசாலைகள், 05 அரச அலுவலகங்கள், 15 தனியார் நிறுவனங்கள், 08 பொது அமைப்புக்கள், 02 சமய அமைப்புகள் மற்றும் ஏனைய 09 இடங்கள், இதன்போது பரிசோதிக்கப்பட்டதில், 202 இடங்கள், டெங்கு நுளம்பு பரவும் இடங்களாக இனங்காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களுள், டெங்கு நுளம்பு பரவும் 11 இடங்கள் உடனடியாக அழிக்கப்பட்டதுடன், 180 இடங்களை அழிப்பதற்கு, கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் போது, 53 பேர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன், மூவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக, பொதுச் சுகாதார பிரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago