முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூன் 05 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு அமைய முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உடப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது.
முந்தல் பொலிஸாரும் பிரதேச பிரஜா பொலிஸ் குழுவினரும் இணைந்து அப்பிரதேசத்திலுள்ள வீடுகளைச் சோதணை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது டெங்குக் காய்ச்சலின் தாக்கம் தொடர்பில் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு, நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டது.


8 hours ago
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
28 Oct 2025
28 Oct 2025