2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தாக்குதலில் இளம் தந்தை பலி

Thipaan   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

ஆராச்சிக்கட்டு ஆனவழுந்தாவ ஜயரத்னபுர பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில்  இளம் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மதுபான உபசாரத்தின் போது இடம்பெற்ற வாக்குவாதத்தின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், வைபவத்தை ஏற்பாடு செய்தவரே உயிரிந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சமந்த புஸ்பகுமார (வயது 29) என்பரே உயிரிழந்துள்ளார்.

மதுபானம் அருந்திக் கொண்டிருந்தவர்களிடையே இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது பிள்ளையின் பிறந்தநாள் வைபவத்துக்காக தனது நண்பர்கள் சிலருக்கும் குறித்தநபர் அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள், ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் பல இடங்களில் மதுபானம் அருந்திவிட்டு பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை பிறந்தநாள் வீட்டுக்கு வந்துள்ளனர்.

வீட்டுக்கு வந்தவர்கள் அங்கு மீண்டும் மதுபானம் அருந்த தொடங்கிய நிலையிலேயே அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதில் கலந்து கொண்ட நால்வரும் இணைந்து தாக்குதல் நடாத்தியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தாக்குதல் நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபரை வீட்டாரும், அயலவர்களும் இணைந்து ஆனவிழுந்தாவ கிராமிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பிரேதம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தப்பிச் சென்றவர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X