2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்க செயலாளர் தெரிவு

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம் முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரியாக கடந்த நான்கு  வருடங்களாக பணிபுரிந்து வரும் பீ.எம். ஹிஸாம் ஜே.பீ., புத்தளம் மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்கச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

27 திடீர் மரண விசாரணை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம், சிலாபம்  சுதசுன மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (31) காலை நடைபெற்றது. இதன் போதே அவர் செயலாளராக  ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். 

இப்பதவிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் புத்தளம் மாவட்டத்தில் திடீர் மரணங்களினால் ஏற்படும் எதிர்பாராத பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அதிகாரியாக செயற்படும் அங்கிகாரம் பெற்றுள்ளார்.

நாடளாவிய ரீதியில் செயற்படும் தேசிய திடீர் மரண விசாரணை அதிகாரிகள் தாய் சங்கத்தின் உப தலைவராகவும் ஹிஸாம் ஜே.பீ. பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X