Princiya Dixci / 2016 மே 02 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் மகன் மீது தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததில் தாய் உயிரிழந்துள்ளதுடன், மகன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், எப்பாவல, கல்மடுமப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு 7.15க்கு இச்சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான மல்லிகா தஷ்தூரிஆராச்சி எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 18 வயதான மகன் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்கென அநுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
1 hours ago