2025 நவம்பர் 05, புதன்கிழமை

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் பலி

Sudharshini   / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாகும்புக்கடவல , ரத்மஹால்வௌ பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (22)  இரவு 8.00 மணியளவில் மேற்படி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசார  நிகழ்வொன்றில்  கலந்தகொண்ட சிலருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போதே  துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில்  ஒரு பிள்ளையின் தந்தையான டபிள்யூ. டி. சுசில் சமந்த (32) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.  அவரை புத்தளம்  வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம்  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X