Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முஹம்மது முஸப்பிர்
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கம்பிட்டி வைக்கால பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றினுள் நுழைந்த மூவர், குறித்த வீட்டாரை அறையொன்றில் கட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்து தங்க நகைகள், வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஜீப் வண்டி ஆகியவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரப்பகுதியிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
'இரவு நாம் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த வேளை வீட்டின் முன் கதவு வழியாக வீட்டினுள் நுழைந்த மூவர், என்னையும் ஏனையோரையும் கட்டிப்போட்டுவிட்டு இக்கொள்ளையினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்' என வென்னப்புவ மேல் அங்கம்பிட்டி, வைக்கால் பிரதேசத்தைச் சேர்ந்த டப்ளிவ். பர்ட்டி நிகால் (வயது 59) என்பவர் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து சுமார் 30 இலட்சம் பெறுமதியான ஜீப் வண்டியொன்று, நான்கரைப் பவுண் தங்க ஆபரணங்கன் மற்றும் நான்கு வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொள்ளையர்கள் வீட்டிலிருந்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 May 2025