2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தடைசெய்யப்பட்ட களைநாசினிகள் கைப்பற்றல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

வனாத்தவில்லு விவசாய இரசாயனப் பதார்த்தங்கள் விற்பனை செய்யும் நிலையமென்றில், தடைசெய்யப்பட்ட 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான களைநாசினிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை (23) கைப்பற்றப்பட்டுள்ளன. 

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதியிலிருந்து நாட்டில் தடைசெய்யப்பட்ட குறித்த களைநாசினிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

4 லீற்றர்கள் கொண்ட 185 கலன்களில் களை நாசினித் திரவம் காணப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X